ஹமாஸ் என்ன செய்துள்ளது…?


– Syed Ali –


ட்ரம்பின் 20 அம்ச காஸா அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் முழு ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் சில பகுதிகளை ஏற்று, மற்றவற்றில் பேச்சுவார்த்தை வேண்டும் என்று கூறியுள்ளது. 

**ஹமாஸ் ஏற்றவை:**

– சியோனிச இஸ்ரேலிய கைதிகள் (உயிருடன் உள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள்) விடுவிப்பு.

– காஸாவின் நிர்வாகத்தை ஃபலஸ்தீனிய தனிநபர்களால் ஆன ஒரு குழுவுக்கு (டெக்னோகிராட்கள்) ஒப்படைப்பது.

**ஹமாஸ் நிராகரித்தவை:**

– தங்களின் ஆயுதங்களை கைவிடுதல்.

– காஸாவின் ஆளுமையில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை.

– சர்வதேச படைகளின் காசாவிற்குள் பிரவேசம்.

**ஹமாஸின் விமர்சனங்கள்:**

– இந்தத் திட்டம் சியோனிச இஸ்ரேலின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கிறது.

– ஃபலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை புறக்கணிக்கிறது.

**ஹமாஸின் நிலைப்பாடு:**

– திட்டத்தை “நல்ல நம்பிக்கையுடன்” ஆய்வு செய்து, அறபு, இஸ்லாமிய, சர்வதேச முயற்சிகளை வரவேற்கிறது.

– ஆனால், முழு சியோனிச இஸ்ரேலிய படைகளின் வாபஸ், நிரந்தர போர்நிறுத்தம், ஃபலஸ்தீனியர்களின் உரிமைகள் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

– இவை குறித்து தேசிய ஒருமித்த கருத்து தேவை என்று கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply