ஹரித்வார் மானசா தேவி கோயிலில் சனநெரிசல்! –  6 பக்தர்கள்  பலி  பலி

 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட திடீர்  சன நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளதுடன்  காயமடைந்த  பலா்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.  இந்த துயர சம்பவம், கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நிகழ்ந்துள்ளது.

கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம்   காரணமாக  நெரிசல் உண்டானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த பக்தர்கள்  நோயாளா்காவு வண்டி  மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனனர். இதுவரை 55 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சிவ பக்தர்களுக்கு முக்கியமான வழிபாட்டு தலமாக ஹரித்வார் விளங்குகிறது. குறிப்பாக, சாவன் மாதத்தில் கங்கை நதியில் இருந்து நீர் எடுக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள்   செல்லும் நிலையில்  இந்த  சம்பவம்  இடம்பெற்றுள்ளது. .

The post ஹரித்வார் மானசா தேவி கோயிலில் சனநெரிசல்! –  6 பக்தர்கள்  பலி  பலி appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply