ஹரித்வார் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்டம் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மானசா தேவி கோவிலில் இன்று (ஜூலை 27) சுவாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடிஇருந்த நிலையில் திடீரனெ கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

குறித்த கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 25பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுவதுடன் தற்போதும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply