ஹார்முஸ் நீரிணையில் காட்டும் அக்கறையை, லெபனானில் உயிரிழக்கு ரத்தத்தின் மீது ஏன் காண்பதில்லை..?

“நான் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும், இந்த அழிவின் பிரம்மாண்டமான அளவைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன், இவை அனைத்தும் ஒரே ஒரு தனிநபரிடமிருந்தே உருவாகின்றன. ஆயினும், அவரைப் பொறுப்பேற்கச் செய்யவோ அல்லது அவரது நடவடிக்கைகளுக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கவோ யாராலும் முடியவில்லை!”

“நெதன்யாகுவின் விஷயம் என்று வரும்போது, ​​நீங்கள் அடிக்கடி பேசும் அந்த ‘சர்வதேச சட்டம்’ எங்கே போனது? மனிதநேயத்தைத் தனது கால்களால் மிதித்துத் துவைக்கும், அழிவைக் கண்டு இன்புறும், மற்றும் தனது நாளை மரணத்தையும் ரத்தத்தையும் ‘காலை உணவாகக்’ கொண்டே தொடங்குவது போலத் தோன்றும் அந்த மனிதனுக்கு அது ஏன் பொருந்தவில்லை?”

“இதுதானா நீதி? சர்வதேச சட்டம் பலவீனமானவர்களுக்கு எதிராக மட்டுமே தனது அதிகாரத்தைக் காட்டுகிறதா? ஹார்முஸ் நீரிணை திறந்தே இருக்க வேண்டும் என்பதும், வர்த்தகம் எவ்விதப் பாதிப்புமின்றித் தொடர வேண்டும் என்பதும் மட்டும்தானா இப்போது உங்கள் ஒரே கவலை?”

“ஹார்முஸ் நீரிணையைத் திறந்தே வைத்திருக்க நீங்கள் காட்டும் அதே அக்கறையை, லெபனானில் உயிரிழக்கும் ஏழை மற்றும் நிரபராதிகளின் ரத்தத்தின் மீது ஏன் நாம் காண்பதில்லை? உங்கள் முன்னுரிமைகள் அந்த நீரிணையின் மீதுதான் இருக்கின்றன என்றால், அந்த நீரிணையை ஈரான் மூடுவதை நான் ஆதரிக்கிறேன்… ஏனெனில், ஒரே ஒரு மனித உயிரின் மதிப்பு, உங்கள் அந்தச் சனியன் பிடித்த ஹார்முஸ் நீரிணையின் மதிப்பை விட ஆயிரம் மடங்கு அதிகம்.”

(பிரேசில் அதிபர் லூலா டா சில்வா)

Dr.Jose

Bakkiam

நன்றி

Leave a Reply