ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது | 475 South Korean Hyundai workers held in US immigration raid,

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது.

இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடி​யுரிமை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அவர்​களை கண்​டதும், சட்​ட​விரோத​மாக பணி​யாற்​றிய தென்​கொரிய தொழிலா​ளர்​கள் ஓடி மறைந்​தனர். அவர்​களை மடக்​கிய அமெரிக்க போலீ​ஸார் சுவர் ஓரமாக வரிசை​யாக நிற்க வைத்து கைது செய்​தனர். அனை​வரிட​மும், சட்​டபூர்வ ஆவணங்​கள் உள்​ளதா என விசா​ரித்​தனர். சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த தொழிலா​ளர்​களுக்கு கைவிலங்கு இடப்​பட்​டது. இந்த நடவடிக்​கை​யால் ஹூண்​டாய் தொழிற்​சாலை வளாகம் போர்க்​களம் போல் காட்​சி​யளித்​தது. தப்​பிக்க முயன்ற தொழிலா​ளர்​கள் பலர் ஏசி காற்று வரும் குழாய்​களுக்​குள் சென்று பதுங்​கினர். சிலர் கழிவு நீர் குளத்​தில் இறங்​கினர். அவர்​களை படகில் சென்று அமெரிக்க போலீ​ஸார் பிடித்த வந்​தனர்.

இவர்​களில் பலர் அமெரிக்கா​வுக்​குள் சட்​ட​விரோத​மாக ஊடுரு​வி​யுள்​ளனர். பலர் விசா காலம் முடிவடைந்து தங்​கி​யுள்​ளனர். இவர்​கள் தென்​கொரி​யா​வைச் சேர்ந்​தவர்​கள் என உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தால், அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்க அமெரிக்​கா​வில் உள்ள தென்​கொரிய தூதரகம் முன்​வந்​துள்​ளது. இது தொடர்​பாக அமெரிக்க அதி​காரி​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்த, தென்​கொரிய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் சோ ஹூயுன் அமெரிக்​கா வரவும்​ தயார்​ என கூறியுள்​ளார்​.

நன்றி

Leave a Reply