₹6.5 இலட்சம் ரூபாய் பெறுதியான ஐ.பி.எல். ஜெர்சிகள் திருட்டு!

மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து ₹6.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2025 ஐ.பி.எல். திருடப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்திற்கு 40 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் தான் காரணம் என்றும், அவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சுமார் 2500 ரூபாய் மதிப்புள்ள 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் சூதாட்ட அடிமைத்தனத்திற்கு நிதி திரட்டுவதற்காக காவலர் அவற்றைத் திருடியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜெர்சிகள் வெவ்வேறு அணிகளுக்குச் சொந்தமானவை என்றாலும், அவை வீரர்களுக்கானதா அல்லது பொதுமக்களுக்கானதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

காவலர் ஜெர்சிகளை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு ஆன்லைன் தரகருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply