⚓ நெடுந்தீவில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இன்று செவ்வாய்க்கிழமை (13-01-2026) அதிகாலை 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்துப் பணியின் போது, இந்தியாவிற்குச் சொந்தமான ஒரு விசைப்படகுடன் இந்த மீனவர்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களின் படகும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னா் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 10 மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடற்படையினர் தமது பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tag Words: #Neduntheevu #IndianFishermen #SriLankaNavy #MaritimeBorder #JaffnaNews #FishermenArrest #MyliddyHarbor #KaytsCourt #FisheriesConflict

நன்றி

Leave a Reply