55
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மற்றுமொரு மகுடம்! புகழ்பெற்ற U.S. News & World Report வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இலங்கை முதல் ஐந்து இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் பிராந்தியப் பயணங்களுக்கான இடைநிறுத்தப் புள்ளியாக (Secondary stop) இருந்த இலங்கை, இன்று உலகப் பயணிகள் தேடி வரும் “தனித்துவமான முதன்மைத் தலமாக” (Stand-alone destination) மாறியுள்ளதாக இந்த அறிக்கை புகழாரம் சூட்டியுள்ளது.
இந்த ஆய்வு மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது:
அணுகல் மற்றும் மலிவு விலை: குறைந்த செலவில் தரமான அனுபவத்தைப் பெறுதல்.
கலாச்சாரம் மற்றும் உணவு: இலங்கையின் செழுமையான பண்பாடு மற்றும் தனித்துவமான சுவைகள்.
ஈர்ப்புகள் மற்றும் நுகர்வோர் விருப்பம்: சுற்றுலாப் பயணிகளின் உண்மையான கருத்துக்கள் மற்றும் விருப்பத் தெரிவுகள்.
அந்த வகையில் இலங்கையின் சிறப்பம்சங்களாகக் ஒரே சிறிய தீவிற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரைகள், யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் அமைந்திருப்பது.
சொகுசு சூழல் சுற்றுலா (Luxury eco-tourism) மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் புகையிரதப் பயணங்களின் விரிவாக்கம்.
2026-ஆம் ஆண்டில் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்கு வைத்துள்ளது. இதற்காக 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதி (Visa-free policy) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய எகோ-ரிசோர்ட்கள் மற்றும் மலையகப் புகையிரதப் பாதைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
2026 இலக்கு: சுமார் 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
விசா மாற்றங்கள்: அண்மையில் ஏற்பட்ட சவால்களை முறியடிக்க, ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டணமில்லாத ETA (Electronic Travel Authorization) வசதியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச அங்கீகாரம்: சமீபத்தில் Travel + Leisure சஞ்சிகையும் 2026-இல் விஜயம் செய்ய வேண்டிய 50 சிறந்த உலகத் தலங்களில் ஒன்றாக இலங்கையைப் பட்டியலிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#SriLanka #TourismSri Lanka #BestPlacesToVisit2026 #VisitSriLanka #TravelAsia #USNewsReport #EcoTourism #SriLankaTravel #VisaFreeSriLanka #CeylonTravel
