53
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை 11:44 மணிக்கு (உள்ளூர் நேரம், 0244 GMT) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன், இதன் ரிக்டர் அளவு 6.7 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் வரை சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என JMA எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#JapanEarthquake #TsunamiWarning #Aomori #Japan #Earthquake #NaturalDisaster #JapanWeatherAgency #சுனாமிஎச்சரிக்கை #ஜப்பான் #நிலநடுக்கம்
