🕊️ பேரிடர் மீட்சி  – அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் களனி ரஜமஹா விகாரையில் தாய்லாந்து – கம்போடியா முரண்பாட்டுக்கு அமைதி தீர்வு காண வலியுறுத்தி நடைபெற்ற மத வழிபாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

🛑 எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்:

அரசியல் இலாபம் தவிர்ப்பு: “தற்போதைய நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சினர் முயற்சிக்கக் கூடாது. அரசியல் வேறுபாடுகளின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.”

விமர்சனங்கள் போதாது: ஒருசிலர் வெறும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும்.

🌏 சர்வதேச அழைப்பு:
தாய்லாந்து – கம்போடியா இடையேயான முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்பட வேண்டும். அமைதி நிலவ வேண்டும்.

“இவ்வாறான முரண்பாடுகளினால் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உலக நாடுகள் இந்த விடயத்தில் அதீத கவனம் கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

#Onalpe SobithaThero #NationalCrisis #UnityForRecovery #சகோதரத்துவம் #அரசியல் #பேரழிவு #இலங்கை

நன்றி

Leave a Reply