31
மொனராகலை, ஹுலந்தாவ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அக்குரேகொட இரட்டைக்கொலை (Double Murder) வழக்குத் தொடர்பில், இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளாா். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த மொனராகலை காவல்துறையினா் இந்தச் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனா்.
குறித்த நபர் தற்போது காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் இந்தத் திட்டமிட்ட குற்றத்தின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#MonaragalaNews #DoubleMurder #PoliceArrest #SriLankaCrime #SpecialInvestigation #LKA #SecurityAlert #Justice #Hulandawa
