🚨 முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! 🚨

 

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புப் பயன்பாட்டிற்காக ஒரு துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, பிரபல திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கங்களை (Serial Numbers) ஆய்வு செய்தபோது, அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட அதே துப்பாக்கி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கி எவ்வாறு ஒரு பாதாள உலகக் குழுத் தலைவரின் கைக்குச் சென்றது என்பது குறித்தும், அது எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்தும் அமைச்சரிடம் விசாரிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பாகப் போதுமான அல்லது தெளிவான விளக்கங்களை அளிக்க அவர் தவறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையிலேயே, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட  காவற்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#DouglasDevananda #SriLankaNews #BreakingNews #CID #PoliticalNews #TamilNews #CrimeInvestigation #SriLankaPolitics #டக்ளஸ்தேவானந்தா #கைது #இலங்கைசெய்திகள்

நன்றி

Leave a Reply