யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினா் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலணி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் (Crystal Meth) போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மயிலங்காடு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் 100 போதை மாத்திரைகளுடன் (Narcotic Pills) மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக தற்போது நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக சுன்னாகம் காவல்துறையினா் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Tag Words: #JaffnaCrime #ChunnakamPolice #DrugBustSL #IceDrug #NarcoticPills #JaffnaNews #LKA #BreakingNews2026
The post 🚨 யாழில். ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகள் உள்ள இருவா் போதைப்பொருட்களுடன் கைது appeared first on Global Tamil News.
