🚨 280 மில்லியன் ரூபாவுடன் ஒருவா்  கைது – பாரிய பணச்சலவை முறியடிப்பு

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைக்கப்பட்டதாகக் கருதப்படும் 280 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொகுசு வாகனங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

280 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் (Rs. 280 Million+). என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (Anti-Money Laundering Act) கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான நபர் இப்பாகமுவ (Ibbagamuwa) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவாா். வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில், இலங்கையில் இந்தப் பணத்தை குறித்த நபர் சேகரித்து வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Tag Words: #SriLankaPolice #DrugBust #MoneyLaundering #Ibbagamuwa #KurunegalaNews #CrimeAlert2026 #AssetSeizure #NarcoticsControl

The post 🚨 280 மில்லியன் ரூபாவுடன் ஒருவா்  கைது – பாரிய பணச்சலவை முறியடிப்பு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply