🚨 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி: ரிலையன்ஸ் முன்னாள் இயக்குநர் புனித் கார்க் கைது! 🚨

 

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை (ED) இன்று கைது செய்துள்ளது.

📍 மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) ஏற்கனவே பதிவு செய்திருந்த FIR-ன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட புனித் கார்க்கை, 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

🔍 வங்கிகளில் பெறப்பட்ட பொதுமக்களைச் சேர்ந்த சுமார் ரூ.40,000 கோடி கடனை, வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் விலை உயர்ந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதும், பின்னர் அதை ரகசியமாக விற்று பணத்தை மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தை (வங்கி கடன்) தனது குழந்தைகளின் வெளிநாட்டுக் கல்விச் செலவு உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சொத்து விற்பனை மூலம் கிடைத்த பணத்தை துபாயைச் சேர்ந்த நபர் (பாகிஸ்தான் தொடர்பு உடையவர் எனச் சொல்லப்படுகிறது) மூலம் முறைகேடாகப் பரிமாற்றம் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

📈 இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய சுமார் ரூ.12,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. இதில் புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளும் அடங்கும்.

இந்த கைது நடவடிக்கை அனில் அம்பானி குழுமத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக குழுமத்தின் மற்ற உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#PuneetGarg #RelianceGroup #AnilAmbani #EnforcementDirectorate #BankFraud #MoneyLaundering #RCOM #FinancialNews #BreakingNews #EDArrest #BankingScam #TamilNews

 

நன்றி

Leave a Reply