பிரபல பொலிவுட் நடிகர் சுனில் செட்டி அண்மையில் வெளியிட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தடை செய்யப்பட்ட மற்றும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க அவருக்கு 40 கோடி ரூபாய் வரை ஊதியம் பேசப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அந்தப் பெரும் தொகையை அவர் துணிச்சலுடன் நிராகரித்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான வரிகள்:
“பணம் எல்லோருக்கும் தேவைதான், எனக்கும் தேவை. ஆனால், என் பிள்ளைகளுக்கோ அல்லது என்னை முன்னுதாரணமாகக் கருதும் இளைஞர்களுக்கோ களங்கம் ஏற்படுத்தும் எதனையும் நான் செய்ய மாட்டேன்.”
பணத்தை விடப் பண்புக்கும், சமூகப் பொறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த சுனில் செட்டியின் இந்தச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
The post 🚫 “40 கோடி வேண்டாம்!” – கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி! 💥 appeared first on Global Tamil News.
