🛡️ அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடிவரவு விதிகளை வலுப்படுத்த  புதிய உத்தரவு

அமெரிக்காவின் குடிவரவுத் திரையிடல் (Immigration Screening), சரிபார்ப்பு (Vetting) மற்றும் எல்லைப் பாதுகாப்பை (Border Enforcement) மேலும் பலப்படுத்துவதற்காக புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்களைக் கண்காணிக்கும் நடைமுறைகளில் இந்த உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இந்த உத்தரவின்படி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அகதிகள் குறித்த பின்னணித் தகவல்கள் முன்பை விட மிகத் தீவிரமாகச் சரிபார்க்கும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகப் பயன்பாடு, கடந்த காலப் பயண விபரங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும். சட்டவிரோதக் குடியேற்றங்களைக் குறைக்கவும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும் தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பு மற்றும் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதன்மூலம் தேவையற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் நுழைவதைத் தடுக்க இது உதவும். மேலும் தீவிர சரிபார்ப்பு நடைமுறைகளால் விசா நடைமுறைகள் மற்றும் குடியேற்ற அனுமதிகள் பெறுவதில் கூடுதல் காலம் எடுக்கக்கூடும்.

இந்த உத்தரவு சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் பட்சத்தில், அது இராஜதந்திர ரீதியான விவாதங்களை உருவாக்கலாம்.இந்த புதிய உத்தரவின் கீழ், சுமார் 39 நாடுகள் முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இவை முக்கியமாக பாதுகாப்பு மற்றும் போதிய பின்னணித் தகவல்கள் இல்லாத காரணத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளன.

19 நாடுகளுக்கு முழுமையான தடை (Full Travel Ban -) விதிக்கப்பட்டுள்ளது இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேற்ற விசா (Immigrant) அல்லது தற்காலிக விசா (Non-immigrant) என எதனையும் பெற முடியாது:

ஆசியா/மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர் (பர்மா), சிரியா, ஏமன், லாவோஸ், பாலஸ்தீன அதிகாரசபை ஆவணங்கள் வைத்திருப்போர்,
ஆபிரிக்கா நாடுகளான லிபியா, சோமாலியா, சூடான், தெற்கு சூடான், எரித்திரியா, சாட், மாலி, நைஜர், புர்க்கினா பாசோ, கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, சியரா லியோன்ஆகியன குறித்த 19 நாடுகளாகும்

20 நாடுகளுக்கு பகுதியளவு தடை (Partial Travel Ban ) விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் குடியேற்ற விசாக்கள் மற்றும் B (சுற்றுலா), F (மாணவர்), M (தொழில்நுட்ப மாணவர்), J (பரிமாற்ற விசா) ஆகிய விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன

நைஜீரியா, கியூபா, வெனிசுலா, அங்கோலா, தான்சானியா, சிம்பாப்வே, சாம்பியா, எத்தியோப்பியா, பாகிஸ்தான்*, ரஷ்யா*, எகிப்து* உட்பட பல நாடுகளாகும். சில நாடுகளுக்கு குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது).

சர்வதேச மாணவர்களுக்கு இந்த உத்தரவு சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது. மேலே குறிப்பிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி உண்டு, ஆனால் அவர்கள் கூடுதல் சோதனைகளுக்கு (Extreme Vetting) உள்ளாக்கப்படுவார்கள்.

விசா நேர்காணலின் போது மாணவர்களின் கடந்த கால சமூக ஊடகப் பதிவுகள் (Social Media Activity) தீவிரமாக ஆராயப்படும். மாணவர் விசாக்களுக்கான ‘Duration of Status’ (D/S) முறையை நீக்கி, குறிப்பிட்ட கால எல்லைக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்ற புதிய விதியைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவில் இருப்பவர்கள் தற்போதைய விசா காலாவதியாகும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருக்கலாம். தடை செய்யப்படாத ஒரு நாட்டின் கடவுச்சீட்டை (Passport) வைத்திருப்பவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது.

Tag Words: #ImmigrationOrder #BorderSecurity #USPolicy #VettingProcess #NationalSecurity #BreakingNews2026 #GlobalNews #LKA

நன்றி

Leave a Reply