36
இன்று திங்கட்கிழமை குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக மூன்று அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) ரக போர் விமானங்களே இவ்வாறு குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குவைத் வான் பாதுகாப்புப் படையினர், தவறுதலாக (Friendly Fire) அமெரிக்க விமானங்களைத் தாக்கியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது . இந்த மூன்று விமானங்களிலும் இருந்த மொத்தம் 6 விமானப்படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும் CENTCOM தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை குவைத் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இது குறித்து முறையான விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
போர்ச் சூழலில் இத்தகைய தவறுகள் நடப்பது இயல்பு என்றும், விமானிகளை மீட்பதில் குவைத் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையில், ஈரானிய அரச ஊடகங்கள் அமெரிக்க விமானங்களை ஈரான் தான் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கோரியுள்ளன, ஆனால் அதனை அமெரிக்கா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் மறுத்துள்ளன.
“ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) தொடங்கிய பிறகு, அமெரிக்கா இழந்த முதல் விமானத் தொகுதி இதுவாகும். குவைத்தில் உள்ள அலி அல் சேலம் (Ali Al Salem) விமானப்படைத் தளம் ஈரானின் முக்கிய இலக்காக இருப்பதால், அப்பகுதியில் வான் பாதுகாப்பு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததே இந்தத் தவறுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
#F15E_StrikeEagle # போர்விமானம் #FriendlyFire #KuwaitAirDefense # குவைத்_வான்பாதுகாப்பு
#அமெரிக்க_மத்திய_கட்டளை #IranUSWar #ஈரான்_அமெரிக்க_போர்
