Customs Chennai Recruitment 2025: மத்திய அரசின் சென்னை சுங்கத்துறையில் (Customs Chennai) காலியாக உள்ள 02 ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook), உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 31.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Customs Chennai Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | சென்னை சுங்கத்துறை Customs Chennai |
| காலியிடங்கள் | 02 |
| பணிகள் | ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook) உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 31.12.2025 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://chennaicustoms.gov.in/ |
Customs Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook) | 01 |
| உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Customs Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook):
- கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கேட்டரிங்கில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ (Diploma in catering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: ஒரு அரசுத் துறை நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு முறை: விண்ணப்பதாரரின் தகுதியை மதிப்பிடுவதற்கு சமையலுக்கான வர்த்தக திறன் தேர்வு (Trade Skill Test for cooking) நடத்தப்படும்.
உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook):
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கேட்டரிங் நிறுவனத்தில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: சமையலில் ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு முறை: விண்ணப்பதாரரின் தகுதியை மதிப்பிடுவதற்கு, சுகாதாரப் பராமரிப்பு உட்பட சமையலுக்கான வர்த்தக திறன் தேர்வு (Trade Skill Test for cooking including maintenance of hygiene) நடத்தப்படும்.
Customs Chennai Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post) | வயது வரம்பு (Age Limit) |
| ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook) | 18 வயது முதல் 25 வயது வரை |
| உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook) | 18 வயது முதல் 25 வயது வரை |
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி
Customs Chennai Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | ஊதிய விகிதம் (Pay Scale) |
| ஹல்வாய் – சமையலர் (Halwai – Cook) | மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை |
| உதவி ஹல்வாய் – சமையலர் (Assistant Halwai – Cook) | மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை |
Customs Chennai Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய அரசு சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- குறுகிய பட்டியல் தயாரித்தல் (Short Listing)
- எழுத்துத் தேர்வு (Written Examination)
- வர்த்தக / திறன் தேர்வு (Trade / Skill Test)
Customs Chennai Recruitment 2025 முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.12.2025
- விண்ணப்பம் முடியம் நாள்: 31.12.2025
Customs Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
மத்திய அரசு சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து முறையாகக் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையுடன் (left-hand thumb impression) விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சேர்க்க வேண்டும்:
- கையொப்பமிடாத பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 4
- சுய முகவரியிட்ட, அஞ்சல்தலை ஒட்டப்படாத உறைகள் (25 செ.மீ x 12 செ.மீ) – 2
- சான்றொப்பம் இடப்பட்ட (Attested) புகைப்பட நகல்கள்:
- கல்வித் தகுதிகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்.
- வயதுச் சான்று (Proof of Age).
- பிரிவுச் சான்றிதழ்கள் (Category Certificates).
- தேவையான மற்றும் விரும்பத்தக்க தகுதிச் சான்றிதழ்கள் (Essential and Desirable Qualification Certificates).
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி (Address for Sending Application): THE ADDITIONAL COMMISSIONER OF CUSTOMS (ESTABLISHMENT) OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS (GENERAL) CUSTOM HOUSE, NO. 60, RAJAJI SALAI, CHENNAI – 600 001
உறையில் கவனிக்க வேண்டியவை (Important Instructions for Envelope):
- ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் அடங்கிய உறையின் மேல் (28 செ.மீ x 13 செ.மீ) தடித்த எழுத்துக்களில் (Bold characters) கீழ்க்கண்டவாறு கட்டாயம் எழுத வேண்டும்:“APPLICATION FOR DEPARTMENTAL CANTEEN POSTS, CHENNAI CUSTOMS”
- உறையின் இடது மேல் மூலையில் (Left Upper Corner) விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் விண்ணப்பதாரரின் பிரிவு (Category) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
முக்கியக் குறிப்பு: சரியான வடிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, உரிய தேதிக்குள் தபாலில் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



