10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு கபாலீசுவரர் கோவிலில் வேலை – இளநிலை உதவியாளர் பணி || தேர்வு கிடையாது..சம்பளம்: ரூ. 18,500/- Mylapore Kapaleeswarar Temple Recruitment 2025

Mylapore Kapaleeswarar Temple Recruitment 2025: தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை சென்னை – 04, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள 19 உதவிப் பொறியாளர் (சிவில்), இளநிலை உதவியாளர், டிக்கெட் விற்பனையாளர், தமிழ்ப் புலவர், உதவி மின்வாரியர், பாரா, குருக்கள் / அர்ச்சகர், காவலர், உதவி பரிச்சரகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்
காலியிடங்கள் 19
பணிகள் உதவிப் பொறியாளர் (சிவில்), இளநிலை உதவியாளர்,
டிக்கெட் விற்பனையாளர், தமிழ்ப் புலவர்,
உதவி மின்வாரியர், பாரா,
குருக்கள் / அர்ச்சகர், காவலர், உதவி பரிச்சரகர்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 28.12.2025
பணியிடம் சென்னை- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி காலியிடங்கள்
உதவிப் பொறியாளர் (சிவில்) 01
இளநிலை உதவியாளர் 02
டிக்கெட் விற்பனையாளர் 03
தமிழ் புலவர் 01
உதவி மின் பணியாளர் 02
பாரா 06
குருக்கள் அர்ச்சகர் உபக்கோயில் 01
காவலர் 01
உதவி பரிசாரகர் 02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி கல்வித் தகுதி
உதவி பொறியாளர் கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டம் (அல்லது) பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில் பிரிவு A மற்றும் B-இல் தேர்ச்சியுடன் கட்டடப் பொறியியலை ஒரு பாடமாகப் பயின்றிருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி.
டிக்கெட் விற்பனையாளர் 1) பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2) அரசு தொழில்நுட்பத் தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அ) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அ) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை. அத்துடன், கணினி பயன்பாடு மற்றும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் புலவர் யாதொரு பல்கலைகழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lit (அ) B.A. (அ) M.A. (அ) M.Lit. பட்டம் மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல்.
உதவி மின் பணியாளர் 1) அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின்/மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் (ITI) தேர்ச்சி மற்றும் 2) மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பாரா தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
குருக்கள் அர்ச்சகர் உபக்கோயில் 1) தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 2) ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காவலர் தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிசாரகர் 1) தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 2) கோயில்களின் வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவி சம்பளம் (மாதம்)
உதவி பொறியாளர் ரூ.36,700 – ரூ.1,16,200
இளநிலை உதவியாளர் ரூ.18,500 – ரூ.58,600
டிக்கெட் விற்பனையாளர் ரூ.18,500 – ரூ.58,600
தமிழ் புலவர் ரூ.18,500 – ரூ.58,600
உதவி மின் பணியாளர் ரூ.16,600 – ரூ.52,400
பாரா ரூ.15,900 – ரூ.50,400
குருக்கள் அர்ச்சகர் உபக்கோயில் ரூ.11,600 – ரூ.36,800
காவலர் ரூ.11,600 – ரூ.36,800
உதவி பரிசாரகர் ரூ.10,000 – ரூ.31,500

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.12.2025

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்: விண்ணப்பப் படிவத்தையும், அதற்கான நிபந்தனைகளையும் நீங்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்தை அனுப்புதல்:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
  • அனுப்பப்படும் அஞ்சல் உறையின் மீது “வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம்” என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
  • விண்ணப்பங்களை நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்: இணை ஆணையர் /செயல் அலுவலர்,அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,மயிலாப்பூர், சென்னை – 04.

கூடுதல் இணைப்புகள்: விண்ணப்பத்துடன், ரூ.75/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையையும் (Acknowledgement Card) ஒரு அஞ்சல் உறையையும் சேர்த்து இணைத்து அனுப்ப வேண்டும்.

முக்கியக் குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply