10, 12-ம் வகுப்பு போதும்; சென்னை கடலோர காவல் படை வேலைவாய்ப்பு – 14 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம் Indian Coast Guard Chennai Recruitment 2025

Indian Coast Guard Chennai Recruitment 2025: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard) சென்னை பிராந்தியத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, குரூப் சி பிரிவில் காலியாக உள்ள Peon, Store Keeper Grade-II, Engine Driver, Lascar, Civilian Motor Transport Driver (Ordinary Grade), GO (Gestner Operator), Welder (Semi-Skilled) ஆகிய பதவிகளில் மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.12.2025 தேதிக்குள் ஆஃப்லைன் (தபால்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த குரூப்-C பணியிடங்களுக்கு, Store Keeper Grade-II பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும், மற்ற பெரும்பாலான பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ (ITI) தேர்ச்சியும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், Civilian Motor Transport Driver போன்ற பணிகளுக்கு அதற்கான ஓட்டுநர் உரிமம் போன்ற கூடுதல் தகுதிகளும் தேவைப்படும். விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை குறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் இந்திய கடலோர காவல்படை
Indian Coast Guard
காலியிடங்கள் 14
பணி Peon, Store Keeper Grade-II, Engine Driver,
Lascar, Civilian Motor Transport Driver (Ordinary Grade),
GO (Gestner Operator), Welder (Semi-Skilled)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 29.12.2025
பணியிடம் சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indiancoastguard.gov.in/

இந்திய கடலோர காவல்படை சென்னை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Store Keeper Grade-II (ஸ்டோர் கீப்பர்) 01
Engine Driver (இயந்திர ஓட்டுநர்) 03
Lascar 02
Civilian Motor Transport Driver (Ordinary Grade) (சிவிலியன் மோட்டார் போக்குவரத்து ஓட்டுநர்) 03
Peon, GO (Gestner Operator) (பியூன்) 04
Welder (Semi-Skilled) (வெல்டர்) 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி விவரங்கள் கீழே பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
ஸ்டோர் கீப்பர் (Store Keeper Grade-II) 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், அரசு பொதுத்துறை அல்லது அரசு அமைப்புகளில் ஸ்டோர் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
என்ஜின் டிரைவர் (Engine Driver) 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
லாஸ்கர் (Lascar) 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சிவிலியன் மோட்டோர் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (Civilian Motor Transport Driver) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது அதற்கு இணையானது) பெற்று, ஹெவி வாகனங்கள் இயக்கும் லைசன்ஸ் மற்றும் இரண்டு ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் அவசியம்.
பியூன் (Peon) 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், அரசு அலுவலகங்களில் ஆஃபிஸ் அட்டண்டண்ட் ஆக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
GO (Gestner Operator) 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், அரசு அலுவலகங்களில் ஆஃபிஸ் அட்டண்டண்ட் ஆக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
Welder (Semi-Skilled) (Matriculation (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன், சம்பந்தப்பட்ட பிரிவில் (Relevant Trade) 03 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

சென்னை கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு விவரங்கள் கீழே பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் வயது வரம்பு (29.12.2025 நிலவரப்படி)
Store Keeper Grade-II 18 முதல் 25 ஆண்டுகள்
Engine Driver (இயந்திர ஓட்டுநர்) 18 முதல் 30 ஆண்டுகள்
Lascar 18 முதல் 30 ஆண்டுகள்
Civilian Motor Transport Driver (Ordinary Grade) (சிவிலியன் மோட்டார் போக்குவரத்து ஓட்டுநர்) 18 முதல் 27 ஆண்டுகள்
Peon, GO (Gestner Operator) (பியூன்) 18 முதல் 27 ஆண்டுகள்
Welder (Semi-Skilled) (வெல்டர்) 18 முதல் 27 ஆண்டுகள்

வயது வரம்பு தளர்வு:

விண்ணப்பதாரர் வகை அதிகபட்ச வயது வரம்பு தளர்வு
SC/ ST விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள் 15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் 13 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) அரசு கொள்கையின்படி

சென்னை கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் சம்பளம் விபரங்கள் கீழே பதவி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் 7வது ஊதியக் குழுவின்படி அடிப்படை சம்பள வரம்பு
Lascar ரூ.18,000 – ரூ. 56,900
Peon, GO (Gestner Operator) ரூ.18,000 – ரூ.56,900
Welder (Semi-Skilled) ரூ.18,000 – ரூ.56,900
Store Keeper Grade-II ரூ.19,900 – ரூ.63,200
Civilian Motor Transport Driver (Ordinary Grade) (சிவிலியன் மோட்டார் போக்குவரத்து ஓட்டுநர்) ரூ.19,900 – ரூ.63,200
Engine Driver (இயந்திர ஓட்டுநர்) ரூ.25,500 – ரூ.81,100

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • எழுத்துத் தேர்வு (Written Exam)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 05.11.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2025

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

சென்னை கடலோர காவல்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் சாதாரண அஞ்சல் (Ordinary Post) மூலம் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Commander Coast Guard Region (East) Near Napier Bridge Fort St George (PO) Chennai-600 009

முக்கிய குறிப்புகள்: உறையின் மீது எழுதுவது எப்படி?

விண்ணப்பம் அனுப்பப்படும் உறையின் (Envelope) மீது, நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் வகை (பிரிவு) ஆகியவற்றைத் தடித்த எழுத்துக்களில் (bold letters) தெளிவாகக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

உறையின் மீது எழுத வேண்டிய மாதிரி:

“APPLICATION FOR THE POST OF” (i.e., Store Keeper Grade-II / Engine Driver / Lascar / CMTD (OG) / MTS (Peon, GO) / Welder (Semi-Skilled)) AND THE CATEGORY (i.e., UR / EWS / OBC (Non Creamy Layer) / SC / ST)

உதாரணமாக:

நீங்கள் ‘Engine Driver’ பதவிக்கு ‘OBC’ பிரிவின் கீழ் விண்ணப்பித்தால், உறையின் மீது பின்வருமாறு எழுத வேண்டும்:

“APPLICATION FOR THE POST OF ENGINE DRIVER AND THE CATEGORY OBC (NON CREAMY LAYER)”.

கீழே விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு PDF லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply