1000 மில்லியன் மான நஷ்டஈடு கேட்கும் அமைச்சர்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவிடம் ரூ. 1,000 மில்லியன் மான நஷ்டஈடு கோரி சட்ட ரீதியான அறிவித்தலை  அனுப்பியுள்ளார்.

நேற்று (01) அல்லது அதனை அண்மித்த ஒரு நாளில், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாகவும் இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவதூறானவை என குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கறுப்புப் பட்டியலில் (Blacklisted) உள்ள மருந்து நிறுவனம் (Pharmaceutical company) ஒன்றின் உரிமையாளருக்குச் சொந்தமான கடனட்டையைப் பயன்படுத்தி, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்தியாவில் ஒரு மில்லியன் பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்.” என நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply