அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர், 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிணை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த பொதுப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்ட நபரிடமிருந்து வாகன சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, வழக்கு பதிவு செய்யாமல் திருப்பித் தருவதற்காக 10,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (12) சம்மாந்துறை நீதவான் டி. கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.