MFL Recruitment 2026: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (Madras Fertilizers Limited – MFL), சென்னை மணலியில் உள்ள அதன் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, டெக்னீஷியன் (Technician), டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) மற்றும் ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) ஆகிய மூன்று விதமான பதவிகளில் மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.04.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
MFL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Madras Fertilizers Limited (MFL) மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) |
| காலியிடங்கள் | 43 |
| பணிகள் | டெக்னீஷியன் (Technician) டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 05.04.2026 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://madrasfert.co.in/resources/recruitment/ |
MFL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் |
| டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) | 38 |
| டெக்னீஷியன் (Technician) | 03 |
| ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) | 02 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
MFL Recruitment 2026 கல்வித் தகுதி
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Qualification) |
| டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) | Diploma (Chemical / Mechanical / Electrical / Instrumentation) – 2024 or 2025 pass outs only |
| டெக்னீஷியன் (Technician) | SSLC with 3 years experience in Rigging (OR) ITI Welding with SSLC |
| ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) | Any Degree with Typewriting & Shorthand (OR) Diploma in Commercial/Modern Office Practice |
MFL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு விவரம்:
| பிரிவு (Category) | வயது தளர்வு (Relaxation) |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (General / EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
| PwBD (SC / ST) | 15 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | மாதச் சம்பளம் |
| டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) | ₹24,500/- |
| டெக்னீஷியன் (Technician) | ₹21,500/- |
| ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) | ₹22,500/- |
தேர்வு செயல்முறை
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT), திறன் தேர்வு / தொழில்முறைத் தேர்வு (Skill / Trade Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / Ex-Servicemen / PWD: கட்டணம் கிடையாது (No Fee).
- மற்ற பிரிவினர் (Others): ₹500/-.
MFL Recruitment 2026 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2026
MFL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.03.2026 முதல் 05.04.2026 தேதிக்குள் https://madrasfert.co.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



