10வது பாஸ் போதும் SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு – 25,487 காலியிடங்கள் || ரூ.69,100 சம்பளம்! SSC GD Constable Recruitment 2025

SSC GD Constable Recruitment 2025: மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் (GD) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கியுள்ள நிலையில், மொத்தம் 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்களுக்கு 23,467 இடங்களும், பெண்களுக்கு 2,020 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன; குறிப்பாக CISF படையில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட மிக அதிகபட்ச இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.12.2025 தேதிக்குள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பொதுவாக பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)..ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் பணியாளர் தேர்வு ஆணையம்
Staff Selection Commission
SSC Constable GD Recruitment 2025
காலியிடங்கள் 25487
பணிகள் Constable (GD)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 31.12.2025
பணியிடம் தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

SSC GD கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

ஆண்களுக்கான பணியிட விவரங்கள்

படை (Force) காலியிடங்கள்
BSF (எல்லை பாதுகாப்புப் படை) 524
CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) 13,135
CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) 5,366
SSB (சசாஸ்திர சீமா பால்) 1,764
ITBP (இந்தோ திபெத்திய எல்லைக் காவல்) 1,099
AR (அசாம் ரைபிள்ஸ்) 1,556
SSF (செயலக பாதுகாப்புப் படை) 23
மொத்தம் 23,467

பெண்களுக்கான பணியிட விவரங்கள்

படை (Force) பெண்களுக்கான காலியிடங்கள்
BSF (எல்லை பாதுகாப்புப் படை) 92
CISF (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை) 1,460
CRPF (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) 124
SSB (சசாஸ்திர சீமா பால்) 0
ITBP (இந்தோ திபெத்திய எல்லைக் காவல்) 194
AR (அசாம் ரைபிள்ஸ்) 150
SSF (செயலக பாதுகாப்புப் படை) 0
மொத்தம் 2,020

மொத்த காலியிடங்கள்: 25487

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் கல்வித் தகுதி
Constable (GD) விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்கக் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் (அதாவது 02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்திருக்க வேண்டும்). வயது வரம்பு கணக்கீடு நாள் பொதுவாக 01.01.2026.

வயது தளர்வு:

  • SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
பதவியின் பெயர் சம்பள வரம்பு (ரூ.)
Constable (GD) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதன்படி மாதச் சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும். இதுதவிர மத்திய அரசின் இதர சலுகைகளும் உண்டு.

SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. கணினி வழித் தேர்வு (Computer Based Exam – CBE)
  2. உடற்தகுதித் தேர்வு (PET & PST)
  3. மருத்துவப் பரிசோதனை (Medical Exam)
  4. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)

முக்கிய குறிப்பு: கணினி வழித் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியைத் தவிர, தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என்பது தமிழக மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகும்.


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்

SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.12.2025 முதல் 31.12.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply