CBSE Recruitment 2025: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறை 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CBSE வாரியம் தற்போது காலியாக உள்ள 124 இளநிலை உதவியாளர் (Junior Assistant), இளநிலை கணக்காளர் (Junior Accountant), Assistant Secretary, Assistant Professor & Assistant Director (Academics), Assistant Professor & Assistant Director (Training), Assistant Professor & Assistant Director (Skill Education), Accounts Officer, Superintendent, Junior Translation Officer, பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 22.12.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CBSE Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ. |
| காலியிடங்கள் | 212 |
| பணிகள் | இளநிலை உதவியாளர் (Junior Assistant), இளநிலை கணக்காளர் (Junior Accountant), Assistant Secretary, Assistant Professor & Assistant Director (Academics), Assistant Professor & Assistant Director (Training), Assistant Professor & Assistant Director (Skill Education), Accounts Officer, Superintendent, Junior Translation Officer, |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 22.12.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.cbse.gov.in/ |
காலியிடங்கள் விவரம்
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| Assistant Secretary (Group A) | 08 |
| Assistant Professor & Assistant Director (Academics) (Group A) | 12 |
| Assistant Professor & Assistant Director (Training) (Group A) | 08 |
| Assistant Professor & Assistant Director (Skill Education) (Group A) | 07 |
| Accounts Officer (Group A) | 02 |
| Superintendent (Group B) | 27 |
| Junior Translation Officer (Group B) | 09 |
| Junior Accountant (Group C) | 16 |
| Junior Assistant (Group C) | 35 |
| மொத்தம் (Total) | 124 |
கல்வித் தகுதி
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் 12ம் வகுப்பு, Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பதவி வாரியான கல்வித்தகுதி விபரங்கள்:
| பதவி (Post) | தேவையான கல்வித் தகுதி (Essential Qualification – அவசியம்) |
| Assistant Secretary | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Academics) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Post Graduate Degree) (அல்லது அதற்கு சமமான தரத்துடன்) பெற்றிருக்க வேண்டும். சலுகைகள் பொருந்தும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Training) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Post Graduate Degree) (அல்லது அதற்கு சமமான தரத்துடன்) பெற்றிருக்க வேண்டும். சலுகைகள் பொருந்தும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Skill Education) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Post Graduate Degree) (அல்லது அதற்கு சமமான தரத்துடன்) பெற்றிருக்க வேண்டும். சலுகைகள் பொருந்தும். |
| Accounts Officer | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொருளாதாரம்/ வணிகவியல்/ கணக்குகள்/ நிதி/ வணிக ஆய்வுகள்/ செலவுக் கணக்கு இதில் ஏதேனும் ஒரு பாடத்துடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மத்திய/மாநில அரசுத் துறையால் நடத்தப்படும் SAS/JAO(C) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.B.A. (Finance)/ Chartered Accountant/ICWA தேர்ச்சி. |
| Superintendent | (i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானது. (ii) கணினி/ கணினி பயன்பாடுகளில் (Windows, MS-Office, தரவுத்தளங்கள், இணையம்) பணிபுரியும் அறிவு இருக்க வேண்டும். |
| Junior Translation Officer | இந்தியை கட்டாய அல்லது விருப்பப் பாடமாக எடுத்து ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கிலத்தை கட்டாய அல்லது விருப்பப் பாடமாக எடுத்து இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத வேறு எந்தப் பாடத்தில் முதுகலை பட்டம், அதில் பட்டப் படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் கட்டாய அல்லது விருப்பப் பாடமாக இருக்க வேண்டும். மேலும் இந்தி-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-இந்தி மொழிபெயர்ப்பில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது மத்திய/மாநில அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகள் மொழிபெயர்ப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
| Junior Accountant | அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்தில் கணக்கு/ வணிக ஆய்வுகள்/ பொருளாதாரம்/ வணிகவியல்/ தொழில்முனைவு/ நிதி/ வணிக நிர்வாகம்/ வரிவிதிப்பு/ செலவுக் கணக்கு இதில் ஏதேனும் ஒரு பாடத்துடன் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும் கணினியில் ஆங்கிலத்தில் 35 w.p.m. அல்லது இந்தியில் 30 w.p.m. தட்டச்சு வேகம் இருக்க வேண்டும். |
| Junior Assistant | (i) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதி. (ii) கணினியில் ஆங்கிலத்தில் 35 w.p.m. அல்லது இந்தியில் 30 w.p.m. தட்டச்சு வேகம் இருக்க வேண்டும். |
வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post) | வயது வரம்பு (As on 22.12.2025) |
| Assistant Secretary | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Academics) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Training) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Assistant Professor & Assistant Director (AD) (Skill Education) | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Accounts Officer | 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Superintendent | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Junior Translation Officer | 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Junior Accountant | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
| Junior Assistant | 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். |
உச்ச வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ST | 5 years |
| OBC | 3 years |
| PwBD (Gen/EWS) | 10 years |
| PwBD (SC/ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
| Ex-Servicemen | As per Govt. Policy |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CBSE Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவி (Post) | மாதச் சம்பளம் (Salary per Month) |
| Assistant Secretary | Rs.56,100 – Rs.1,77,500 |
| Assistant Professor & Assistant Director (AD) (Academics) | Rs.56,100 – Rs.1,77,500 |
| Assistant Professor & Assistant Director (AD) (Training) | Rs.56,100 – Rs.1,77,500 |
| Assistant Professor & Assistant Director (AD) (Skill Education) | Rs.56,100 – Rs.1,77,500 |
| Accounts Officer | Rs.56,100 – Rs.1,77,500 |
| Superintendent | Rs.35400 – Rs.112400 |
| Junior Translation Officer | Rs.35400 – Rs.112400 |
| Junior Accountant | Rs.19,900 – Rs.63,200 |
| Junior Assistant | Rs.19,900 – Rs.63,200 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CBSE Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள்
- Tier-1: MCQ Based Preliminary Screening Examination.
- Tier-2: Objective Type (Optical Mark Recognition based) & Descriptive Type written main examination.
- Tier-3: Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
CBSE Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online)
- Group A பதவிகளுக்கு:
- SC/ ST/ PwBD/ முன்னாள் இராணுவத்தினர் (Ex-S)/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.250/-
- பொதுப் பிரிவினர் (Unreserved)/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1750/-
- Group B மற்றும் Group C பதவிகளுக்கு:
- SC/ ST/ PwBD/ முன்னாள் இராணுவத்தினர் (Ex-S)/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.250/-
- பொதுப் பிரிவினர் (Unreserved)/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1050/-
CBSE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cbse.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 02.12.2025 முதல் 22.12.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



