12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை – ரூ.11,916 சம்பளம் || தேர்வு கிடையாது! Coimbatore DCPU Recruitment 2025

Coimbatore DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (Coimbatore DCPU) காலியாகவுள்ள 01 Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலகம்
Coimbatore District Child Protection Unit
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 15.12.2025
பணியிடம் கோயம்புத்தூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://coimbatore.nic.in/

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (Coimbatore District Child Protection Unit – DCPU) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர் காலியிடங்கள்
Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) 01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025-இல் உதவியாளர் – கணினி ஆபரேட்டர் பணிக்குத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • கல்வித் தகுதி விவரங்கள்: உதவியாளர் – கணினி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது அதற்கு இணையான வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன், விண்ணப்பதாரர் கணினியில் டிப்ளோமா அல்லது சான்றிதழ் படிப்பு (Diploma / Certificate in Computers) முடித்திருக்க வேண்டும்.
  • பணி அனுபவம் மற்றும் பிற தகுதிகள்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விண்ணப்பதாரர் கணினியில் நல்ல தேர்ச்சி (Proficiency in Computers) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதியில், விண்ணப்பதாரரின் வயது 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (Coimbatore DCPU) வேலைவாய்ப்பு 2025 பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) பணியாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 11,916/- வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025

தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, 2nd Floor, Old Building, District Collectorate Campus, Coimbatore – 641 018.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply