12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் இளநிலை சுருக்கெழுத்தாளர் வேலை – மாதம் ரூ.48,000 சம்பளம்! NML Recruitment 2025

NML Recruitment 2025: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR-NML) காலியாக உள்ள 05 இளநிலை சுருக்கெழுத்தாளர் (Junior Stenographer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2025 அன்று இரவு 11:00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு Central Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள் CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம்
CSIR-National Metallurgical Laboratory
காலியிடங்கள் 05
பணி Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 31.12.2025 at 11.00 PM
பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nml.res.in/

CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
Junior Stenographer
(இளநிலை சுருக்கெழுத்தாளர்)
05

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிக்கு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) நிர்ணயிக்கப்படும் சுருக்கெழுத்துத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர் வயது வரம்பு
Junior Stenographer
(இளநிலை சுருக்கெழுத்தாளர்)
18-27 வயது

வயது தளர்வு விவரங்கள்:

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது தளர்வு விவரங்கள்:

வகை வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்
பதவியின் பெயர் மாதச் சம்பளம்
Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தாளர்) ரூ.48,000/- மாதம்

CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • எழுத்துத் தேர்வு (Written Test): விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்கான முதல் நிலை.
  • திறன் தேர்வு/சுருக்கெழுத்துப் பரீட்சை (Skill Test/Stenography Test): சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு வேகத்தை சோதிப்பது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

பிரிவு கட்டணம்
பெண்கள், SC, ST, முன்னாள் ராணுவத்தினர், PWD விண்ணப்பதாரர்கள் கட்டணம் இல்லை (NIL)
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500/-

கட்டண முறை: SB Collect மூலம் செலுத்த வேண்டும்.

CSIR-தேசிய உலோகவியல் ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.12.2025 முதல் 31.12.2025 தேதிக்குள் https://www.nml.res.in/ இணையதளத்தில் சென்று “Proceed Now” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply