12வது தேர்ச்சி போதும்…தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை – மாதம் ரூ.17,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Thanjavur Medical College Hospital Recruitment 2026

Thanjavur Medical College Hospital Recruitment 2026: தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் பதிவேடு துறையில் காலியாகவுள்ள 02 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள் அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
காலியிடம் 02
வேலை பெயர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 26.02.2026
பணியிடம் தஞ்சாவூர் மாவட்டம் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://thanjavur.nic.in/

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) 02

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் கல்வித் தகுதி
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) விண்ணப்பதார்கள் கல்வித்தகுதியாக 12-ம் வகுப்பை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 15000 key depressions என்ற வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்களுக்கு மருத்துவத்துறையில் பணியாற்றிய அனுபவம் தேவை.

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வயது வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் சம்பள அளவு (ரூ.)
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதார்களுக்கு மாதம் ரூ.17,000 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here

தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்கள் சுய விபரங்கள் அடங்கிய மாதிரி விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் 30.09.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவுதபால் (speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:  முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply