UPSC NDA I Recruitment 2026: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது, தேசிய பாதுகாப்பு அகாடெமி (NDA) (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் கடற்படை அகாடெமி ஆகியவற்றில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும்.
- ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2025.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
UPSC NDA I Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | Union Public Service Commission யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) தேசிய பாதுகாப்பு அகாடெமி (NDA) |
| காலியிடங்கள் | 394 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.12.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://upsconline.nic.in/ |
Union Public Service Commission Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு அகாடெமி (National Defence Academy – NDA) பணியிடங்கள்:
இராணுவ சேவை (Army Service):
- ஆண்கள் (Male): 198 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 10 பணியிடங்கள்
கடற்படை (Navy):
- ஆண்கள் (Male): 37 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 05 பணியிடங்கள்
விமானப்படை (Air Force) – பிரிவுகள்:
பறக்கும் பிரிவு (Flying):
- ஆண்கள் (Male): 90 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 02 பணியிடங்கள்
தரைப்பணி (Ground Duties) – தொழில்நுட்பம் (Tech):
- ஆண்கள் (Male): 16 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 02 பணியிடங்கள்
தரைப்பணி (Ground Duties) – தொழில்நுட்பம் அல்லாதது (Non Tech):
- ஆண்கள் (Male): 08 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 02 பணியிடங்கள்
கடற்படை அகாதமி (Naval Academy)
(10+2 Cadet Entry Scheme):
- ஆண்கள் (Male): 21 பணியிடங்கள்
- பெண்கள் (Female): 03 பணியிடங்கள்
UPSC NDA I Recruitment 2026 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதிகள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளன:
- தேசிய பாதுகாப்பு அகாதமி (NDA) – இராணுவப் பிரிவு (Army Wing) க்கு: மாநிலக் கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10+2 கல்வி முறையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- NDA இன் விமானப்படை (Air Force) மற்றும் கடற்படைப் பிரிவுகள் (Naval Wings) மற்றும் கடற்படை அகாதமியின் (INA) 10+2 கேடட் நுழைவுத் திட்டத்திற்கு: மாநிலக் கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10+2 கல்வி முறையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, அத்துடன் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும்
ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். எனினும் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும்.
UPSC NDA I Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தேசிய பாதுகாப்பு அகாடெமி (NDA) வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, அவர்கள் 01 ஜூலை 2007-க்கு முன் பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01 ஜூலை 2010-க்குப் பின் பிறந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது, பிறந்த தேதி 01 ஜூலை 2007 முதல் 01 ஜூலை 2010 வரை உள்ளவர்கள் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
UPSC NDA I Recruitment 2026 சம்பள விவரங்கள்:
UPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு, இந்தியப் பாதுகாப்புப் படைகளில் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கான ஊதிய விகித விவரங்கள் தரவரிசைப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவியின் தரவரிசை | ஊதிய வரம்பு (Per Month) |
| லெப்டினன்ட் (Lt) முதல் மேஜர் (Maj) வரை | Rs.56,100 – Rs.1,77,500 |
| லெப்டினன்ட் கர்னல் (Lt Col) முதல் மேஜர் ஜெனரல் (Maj Gen) வரை | Rs.1,21,200 – Rs.2,12,400 |
| லெப்டினன்ட் ஜெனரல் (HAG Scale) | Rs.1,82,200 – Rs.2,24,100 |
| லெப்டினன்ட் ஜெனரல் (HAG+ Scale) | Rs.2,05,400 – Rs. 2,24,400 |
| VCOAS / ஆர்மி கமாண்டர் / லெப்டினன்ட் ஜெனரல் | ₹ Rs.2,25,000 (நிலையானது/Fixed) |
| COAS (இராணுவத் தளபதி) | Rs.2,50,000 (நிலையானது/Fixed) |
UPSC NDA I Recruitment 2026 தேர்வு செயல்முறை
NDA (தேசிய பாதுகாப்பு அகாடெமி) வேலைவாய்ப்பு 2026-க்கான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறை பின்வருமாறு இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது:
- எழுத்துத் தேர்வு (Written Examination): இது முதல் நிலைத் தேர்வு ஆகும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.
- அறிவுத்திறன் மற்றும் ஆளுமைத் தேர்வு (Intelligence and Personality Test – SSB Interview)
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர்
விண்ணப்பக் கட்டணம்:
| Category | Application Fee |
| ST/SC/Female விண்ணப்பதாரர்களுக்கு | கட்டணம் இல்லை |
| மற்ற விண்ணப்பதாரர்களுக்கு | Rs. 100/- |
| கட்டண முறை | ஆன்லைன் |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.12.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2025
- தேர்வு தேதி: 12.04.2026
UPSC NDA I Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடெமி NDA வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் (https://upsc.gov.in/) இணையதளம் என்ற இணையதளத்தில் சென்று “Create Account” பட்டனை கிளிக் செய்து Account Create செய்து ஆன்லைன் மூலம் 10.12.2025 முதல் 30.12.2025 தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



