BOB Capital Markets Recruitment 2025: அரசு வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை நிறுவனமான BOB Capital Markets Limited, இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் காலியாக உள்ள 70 Business Development Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
BOB Capital Markets Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பேங்க் ஆஃப் பரோடா வங்கி BOB Capital Markets Limited (BOB Capital Markets) |
காலியிடங்கள் | 70 |
பணி | Business Development Manager |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் மூலம் (Email) |
கடைசி தேதி | 30.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.bobcaps.in/careers |
BOB Capital Markets Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி Capital Markets Limited வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Business Development Manager – 70 காலியிடங்கள்
வகை வாரியாக / மாநில வாரியாக காலியிடங்கள்:
இடம் | காலியிடங்கள் |
ஆக்ரா | 1 |
டேராடூன் | 2 |
மீரட் | 2 |
வடக்கு டெல்லி | 2 |
நொய்டா | 2 |
லூதியானா | 2 |
சண்டிகர் | 3 |
குர்கான் | 2 |
மேற்கு டெல்லி | 3 |
ஃபரிதாபாத் | 1 |
மத்திய மும்பை | 3 |
தெற்கு மும்பை | 2 |
மேற்கு மும்பை | 3 |
மும்பை மெட்ரோ கிழக்கு | 1 |
நவி மும்பை | 2 |
உஜ்ஜைன் | 0 |
வதோதரா | 2 |
சூரத் | 2 |
நவ்சாரி | 1 |
அகமதாபாத் | 4 |
ராஜ்கோட் | 2 |
புஜ் | 1 |
சங்லி (கோலாப்பூர்) | 1 |
புனே | 2 |
நாக்பூர் | 1 |
சங்வி | 1 |
நாசிக் | 1 |
போபால் | 1 |
குவாலியர் | 1 |
தேவாஸ் | 1 |
இந்தூர் | 0 |
ராய்ப்பூர் | 1 |
கர்நாடகா | 10 |
பாட்னா | 2 |
ராஞ்சி | 2 |
புவனேஷ்வர் | 1 |
சென்னை | 2 |
மொத்தம் | 70 (அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி) |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BOB Capital Markets Recruitment 2025 கல்வித் தகுதி
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை நிறுவனமான BOB Capital Markets Limited-ல் Business Development Manager பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக தோராயமாக மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு, வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
BOB Capital Markets Recruitment 2025 தேர்வு செயல்முறை
BOB Capital Markets Limited Business Development Manager பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் பின்வரும் இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- நேர்காணல் (Interview)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
முக்கிய தேதிகள்
- அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 08.09.2025
- விண்ணப்பம் சமர்ப்பிக்கத் தொடங்கும் நாள்: 08.09.2025
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 30.09.2025
BOB Capital Markets Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
BOB Capital Markets Limited நிறுவனத்தில் Business Development Manager பணிக்கு விண்ணப்பிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம் (resume) மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆவணங்கள்:
- புதுப்பிக்கப்பட்ட சுயவிவரம் (resume)
- வயதுச் சான்று (ஆதார், பிறப்புச் சான்றிதழ்)
- 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு சான்றிதழ்
- அனுபவச் சான்றிதழ் (குறைந்தது 6 மாதங்கள் இருந்தால்)
- அடையாளச் சான்று (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை)
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- சரியான மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்
மின்னஞ்சல்:
மேலே குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் தலைப்பு:
மின்னஞ்சலின் தலைப்பில் “Application for the post of Business Development Manager (Off Roll)” எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு முடிவுகள் குறித்துத் தெரிந்துகொள்ள, உங்களுடைய மின்னஞ்சலைத் தொடர்ந்து சரிபார்க்கவும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |