12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் ரூ. 18,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! DCPU Thoothukudi Recruitment 2025

DCPU Thoothukudi Recruitment 2025: தமிழ்நாடு அரசு, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் வழக்குப் பணியாளர் (Case Worker) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 22.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Description Details
வேலை பிரிவு TN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் குழந்தைகள் நலன் மற்றும்
சிறப்பு சேவைகள் துறை (DCWSS)
தூத்துக்குடி மாவட்ட மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலகு
வேலை பெயர் மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 22.09.2025
பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://thoothukudi.nic.in/

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • வழக்குப் பணியாளர்: 05 காலியிடங்கள்
  • மேற்பார்வையாளர்: 04 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • மேற்பார்வையாளர் (Supervisor): இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி (Social Work), கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (IT), சமூகவியல் (Sociology) அல்லது சமூக அறிவியல் (Social Science) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினிப் பயன்பாடுகளில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
  • வழக்குப் பணியாளர் (Case Worker): இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சிறந்த தகவல் தொடர்புத் திறன் இருத்தல் அவசியம்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) உள்ள பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • வழக்குப் பணியாளர் (Case Worker): இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேற்பார்வையாளர் (Supervisor): இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பதவி வயது வரம்பு
வழக்குப் பணியாளர் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
ரூ.18,000/- சம்பளம் வழங்கப்படும்
மேற்பார்வையாளர் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
ரூ.21,000/- சம்பளம் வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில், நேர்காணல் (Personal Interview) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு (Document Verification) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்


இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thoothukudi.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் 22.09.2025 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்:

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003. தொலைபேசி எண் – 0461-2331188

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நன்றி

Leave a Reply