12 வயது பாடசாலை மாணவி கொலை, குற்றவாளிக்கு மரண தண்டனை!

அம்பலாங்கொடை, தல்கஸ்கொட பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (06) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அம்பலாங்கொடை பிரஜாபதி கோதமி வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்ற 12 வயது மாணவியாவார்.

கடந்த 2008 டிசம்பர் 04 ஆம் திகதி, பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியைத் தல்கஸ்கொட, சுதுவெல்ல பகுதியில் வைத்துப் பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

மாணவியைக் கருவாத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்ததோடு, தடியால் தாக்கிப் படுகொலை செய்துவிட்டு, சடலத்தை அருகிலிருந்த கிணறு ஒன்றில் வீசியுள்ளனர்.

தல்கஸ்கொட பகுதியைச் சேர்ந்த மாரகந்த ஹேவா நலிந்து சம்பத் (புஞ்சா) என்ற நபருக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன

இதற்காக 25,000 ரூபா அபராதமும், 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதோடு , கொலை செய்தமைக்காக குற்றவாளிக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி பலத்த பாதுகாப்புடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நன்றி

Leave a Reply