14 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் – டாக்க இடையில் நேரடி விமான சேவை!

ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டாக்காவின் தேசிய விமான நிறுவனம் இன்று (08) தெரிவித்துள்ளது.

அதன்படி, பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் தனது முதல் டாக்கா-கராச்சி விமானத்தை ஜனவரி 29 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இது வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படுகிறது.

நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதுடன், வணிக மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் பங்களிக்கும் என்று பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 நவம்பரில் கராச்சியிலிருந்து பங்களாதேஷின் முக்கிய துறைமுகமான சிட்டகாங்கிற்கு சரக்குக் கப்பல்கள் மீண்டும் பயணம் செய்தன.

கடந்த மாதம், பங்களாதேஷிக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் இம்ரான் ஹைதர், தலைமை ஆலோசகர் பேராசிரியர் மொஹமட் யூனுஸுடனான சந்திப்பின் போது, ​​ஜனவரியில் கராச்சிக்கும் டாக்காவிற்கும் இடையே நேரடி விமானங்கள் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷிக்கும் இடையிலான உறவுகள் நிலையற்றதாகவே இருந்தன.

எனினும், அவரது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து அவர் நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டன.

அண்மையில் பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக், டிசம்பரில் நாட்டின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கிற்காக டாக்கா சென்றார்.

2025 ஆகஸ்டில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரும் டாக்காவிற்குச் சென்று யூனுஸைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of helicopter and text that says "29 January 2026 Dhaka-Karachi-Dhaka ready for smooth and comfortable journey DHAKA -KARACHI DEPARTURE 20:00 ARRIVAL 23:00 DAYS SATURDAY/THURSDAY KARACHI DHAKA DEPARTURE 00:01 ARRIVAL 04:20 DAYS SUNDAY/FRIDAY yoил home in the sky Biman BANGLADESH AIRLINES Call Center: 13636, Int'l:+88 0961 09610913636, www.biman-airlines.com www. biman-"

நன்றி

Leave a Reply