15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு முன்னர் ஆஜர்படுத்துமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டுமெனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களம் இவரை கைது செய்யுமாறு பரிந்துரைத்தது.

எனினும் இதுவரை இவர் கைதுசெய்யப்படாதுள்ளமை குறித்து விளக்கமளித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கிலுள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டுமென கடந்த காலத்தில்,அம்பிட்டிய சுமணரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார்.

இவரது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கு எதிராக 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர், சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழுள்ள சட்டத்தின் அடிப்படையில்,மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கையும் இவர் தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்டதால்,இத்தேரரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியது.

நன்றி

Leave a Reply