17 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

17 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் இன்று (09) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹெங்கொங்கை எதிர்கொள்ளவுள்ளது.

எட்டு அணிகள் பங்கெடுக்கும் இந்தப் போட்டிகள் செப்டம்பர் 28 வரை நடைபெறும்.

2016 முதல் ஒருநாள் மற்றும் டி:20 வடிவங்களில் மாறி மாறி விளையாடப்பட்டு வரும் ஆசியக் கிண்ண போட்டிகள், இந்த ஆண்டு டி:20 வடிவத்தில் விளையாடப்படும்.

இந்தப் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முக்கியமான ஆயத்தத்தை வழங்குகிறது.

செப்டம்பர் 14 ஆம் திகதி டுபாயில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் மோதலே குழு பிரிவின் முக்கிய போட்டியாக இருக்கும்.

திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறும்.

மீதமுள்ள எட்டு ஆட்டங்கள் அபுதாபியில் நடைபெறும்.

நடப்பு சாம்பியனான இந்தியா, எட்டு பட்டங்களுடன் ஆசியக் கிண்ண வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகவுள்ளது.

இலங்கை ஆறு வெற்றிகளுடன் அடுத்த இடத்திலும், பாகிஸ்தான் இரண்டு வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

குழுக்கள்

குழு A – இந்தியா, ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம்

குழு B: இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹெங்கொங்,

வடிவம்:

ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 நிலைக்குத் தகுதி பெறும். அந்தச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஆசிய சாம்பியன்களைத் தீர்மானிக்க இறுதிப் போட்டியில் போட்டியிடும்.

இடம்:

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டுபாய்

ஷேக் சயீத் மைதானம் – அபுதாபி

போட்டி நேரம்

19 போட்டிகளில் பதினெட்டு போட்டிகள் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் நேரப்படி மாலை 6:30 மணிக்கு (இலங்கை நேரம் இரவு 08.00 மணி) தொடங்கும்.

செப்டம்பர் 15 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறும் ஒரு போட்டியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் இடையிலான போட்டி மாலை 4:00 மணிக்கு (இலங்கை நேரப்படி 05.30 மணிக்கு) தொடங்கும்.

 

Image

நன்றி

Leave a Reply