17 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் பிடிபட்டான்

ரூ. 40 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் இலங்கை வந்த கனடா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்று (25) அதிகாலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் எதையும் அறிவிக்கப்பட வேண்டிய தேவையற்ற ‘கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவின் ஒன்டாரியோவில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அவர் இந்த போதைப்பொருளை கனடாவிலிருந்து கட்டாரின் தோஹாவிற்கு வந்து, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானம் QR-662 ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.


அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 12.196 கி.கி. ஹஷிஷ், 5.298 கி.கி. ‘கொக்கைன்’ போதைப்பொருள் சுங்கத் திணைக்கள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.


போதைப்பொருளுடன் குறித்த பயணி மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.


(கபில)

நன்றி

Leave a Reply