
‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவால் தடைபட்டிருந்த நாவலப்பிட்டி-கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை (15) போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
நிலச்சரிவு காரணமாக வீதியில் விழுந்த மண் அகற்றப்பட்டு, வீதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உயரத்தில் உள்ள சரிவில் இருந்து மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், நிரந்தர தீர்வுகள் வழங்கப்படும் வரை, மட்டுப்படுத்தப்பட்ட பயணத்திற்கு மட்டுமே வீதி பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இடத்தில் பணிகள் முழுமையாக முடியும் வரை வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இராணுவத்தின் 6வது பொறியியல் படைப்பிரிவு, நாவலப்பிட்டி மற்றும் அத்கல பொலிஸ் நிலையங்கள் மற்றும் பஸ்பாகே கோரல பிரதேச சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் இவ்வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
