20 கிகாவாட் சக்தியுடைய மைக்ரோவேவ் ஆயுதத்தை (TPG1000Cs) சீனா உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனா உலகிலேயே முதன்முறையாக 20 கிகாவாட் சக்தியுடைய மைக்ரோவேவ் ஆயுதத்தை (TPG1000Cs) உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக மிகப்பெரும் மின்சக்தியை வெளியிடக்கூடிய இந்த அமைப்பு, Low Earth Orbit (LEO) பகுதியில் இயங்கும் செயற்கைக்கோள்களை பாதிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆயுதத்தின் முக்கிய இலக்கு, Starlink போன்ற செயற்கைக்கோள் இணைய வலையமைப்புகள். அதனால் இதற்கு “Starlink Killer” என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. நேரடி வெடிப்பு இல்லாமல், மைக்ரோவேவ் அலைகள் மூலம் செயற்கைக்கோள்களின் மின்னணு அமைப்புகளை செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கம் எனப் பார்க்கப்படுகிறது.

இது வெறும் ஒரு ஆயுத தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; விண்வெளி பாதுகாப்பு,இணைய சுதந்திரம்,உலக அரசியல் அதிகார சமநிலைஎன்ற பல கேள்விகளையும் ஒரே நேரத்தில் எழுப்புகிறது.

விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல — அது புதிய போர்க்களமாக மாறிக்கொண்டிருக்கிறதா என்ற கவலையும் உலகளவில் அதிகரித்து வருகிறது.

நன்றி

Leave a Reply