சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சில நாட்களுக்கு முன்னர் கண்காணிப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். தான் 20 வருடங்களுக்கு முன் பணியாற்றிய வைத்தியசாலைக்கு சென்றது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.