2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடத்தப்படாது- SLC அறிவிப்பு!

2025 லங்கா பிரீமியர் லீக் (LPL)தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடத்தப்படாது என்று ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இன்று (22) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தற்போது குறித்த தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டு 2026 பெப்ரவரி – மார்ச் காலப்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ICC ஆடவர் உலகக் கிண்ணம் இருபதுக்கு 20 தொடருக்கான முன்கூட்டிய தயார்ப் படுத்தலுக்கான தேவையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply