2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி குழு நிலைப் போட்டியில் இன்றிரவு (19) இந்தியாவும் ஓமானும் மோதுகின்றன.
இது குழு A யில் ஆறாவது மோதலாக இருக்கும்.
முன்னதாக செப்டம்பர் 10 அன்று இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதன் பின்னர் பாகிஸ்தான், ஓமானை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பின்னர் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
தொடர்ந்து பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது.
இடையில், ஓமன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் தோற்றது.
இந்த நிலையில் இன்றைய போட்டி அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில் இன்றிரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
ஓமானுக்கு இது ஒரு கடினமான போட்டியாகும்.
ஏனெனில் இந்தியா ஏற்கனவே குழு ஏ-யில் முதலிடத்தில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சூப்பர் 4 மோதலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பின்னர் அடுத்த சுற்றில் குழு பி அணிகளான பங்களாதேஷ் மற்றும் இலங்கையையும் எதிர்கொள்கிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் இந்தியாவும் ஓமானும் இதுவரை ஒருவருக்கொருவர் சந்தித்ததில்லை.
இந்திய கிரிக்கெட் அணி அபுதாபியில் 1 டி20 போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது.
ஓமன் 23 போட்டிகளில் விளையாடியுள்ளது.
அவர்கள் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.