2025 ஆசியக் கிண்ணம்; பங்களாதேஷ் – ஹெங்கொங் இடையிலான போட்டி இன்று!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (11) நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியானது, ஹெங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தில் ஹெங்கொங், பங்களாதேஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியதை நினைவுபடுத்தும் ஒரு போட்டி இது.

ஆனால், இந்த முறை, லிட்டன் தாஸின் அணி வலுவான ஃபார்மில் உள்ளர்.

ஆசியக் கிண்ணம் தொடங்குவதற்கு முன்பு இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்களை அவர்கள் வென்றுள்ளனர்.

மறுபுறம் ஹொங்கொங்கை பொறுத்தவரை இன்றைய சவால் கடுமையானது.

போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அவர்கள் 94 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தனர்.

அந்த பெரிய தோல்விக்குப் பின்னர், ஹெங்கொங் தலைவர் யாசிம் முர்தாசா தனது அணி மீண்டும் போராடி பங்களாதேஷுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புவார்.

டி:20 சர்வதேச கிரக்கெட் அரங்கில் இரு அணிகளும் ஒரு முறை மாத்திரம் சந்தித்துள்ளன.

அந்தப் போட்டியில் ஹெங்கொங் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply