2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ண புள்ளிகள் அட்டவணை! – Athavan News

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் லீக் கட்டம் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

எட்டு அணிகள் 50 ஓவர் உலக சாம்பியன்ஸ் பட்டத்துக்காக போராடி வருகின்றன.

லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளில் விளையாடும்.

அதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு மட்டுமே அரையிறுதியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

இந்த நிலையில் நேற்று (09) 10 ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்கா நான்கு புள்ளிகள் மற்றும் -0.888 நிகர  ஓட்ட விகிதத்துடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. 

அதேநேரம், இந்தியா நான்கு புள்ளிகள் மற்றும் 0.959 நிகர ஓட்ட விகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

அவுஸ்திரேலியா மூன்று போட்டிகளில் இருந்து ஐந்து புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

பங்களாதேஷ் இரண்டு புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், இலங்கைக்கு ஒரு புள்ளியுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

அதேநேரம், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் எதுவித புள்ளிகள் இல்லாமல் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புள்ளிகள் அட்டவணை:

Image

நன்றி

Leave a Reply