2025 லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
அதன்படி, லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 6வது சீசான் 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள் இலங்கையின் மூன்று முன்னணி சர்வதேச மைதானங்களில் நடைபெறும்.
அதற்கு அமைவாக கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம், கண்டி பல்லேகல மைதானம் மற்றும் தம்புள்ளை ரங்கிரி மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும்.
இலங்கையின் முதன்மையான உள்நாட்டு டி:20 LPL போட்டியானது, சர்வதேச ஈர்ப்பைக் கொண்டுள்ளது.
இது நாட்டின் சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து போட்டியிடவும், அவர்களுக்கு எதிராகவும் போட்டியிட ஒரு துடிப்பான தளமாக செயல்படுகிறது.