2025 ஆசியக் கிண்ணம்; இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று!

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14) நடைபெறும் 2025 ஆசியக் கிண்ணத்தின் ஆறாவது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, சல்மான் அகாவின் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது.

தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன.

எனினும், இந்தியா குழு A இல் முதலிடத்தில் உள்ளது.

மேலும், பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் சிறப்பாக இருப்பதால் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

அதன் பின்னர் இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே இந்த ஆட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் எழும்பியுள்ளது.

Image

நன்றி

Leave a Reply