2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்றிரவு (29) நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, UP வாரியர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன் மூலம் பெங்களூரு அணி எதிரணியின் பிளேஆஃப் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வதோதரா, கோடம்பி மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான அணி UP வாரியர்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்துவதற்கு  கிரேஸ் ஹாரிஸ் மற்றும் நாடின் டி கிளார்க் ஆகியோரின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வாரியர்ஸ் அணியை 143 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்த நாடின் டி கிளார்க் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை வழங்கி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் இலக்கினை இலக்கினை துரத்துவதில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை எடுத்தார்.

இவருக்கு அடுத்தபடியாக மந்தனா 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், எட்டு பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களை எடுத்தார்.

இவர்களின் பங்களிப்புடன் பெங்களூரு அணி 13.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.

போட்டியின் ஆட்டநாயகியாக கிரேஸ் ஹாரிஸ் தெரிவானார்.

இந்த வெற்றியின் அர்த்தம், எட்டு போட்டிகளுக்குப் பின்னர் 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி லீக் கட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து, பெப்ரவரி 5 ஆம் திகதி நான்காவது மகளிர் பிரீமியர் லீக் சீசனின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Image

நன்றி

Leave a Reply