2026 ஜனவரியில் இலங்கை வரும் இங்கிலாந்து அணி! – Athavan News

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணி, இலங்கைக்கான வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தை உறுதி செய்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதியுடன் ஆரம்பமாகிறது.

இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து மூன்று டி:20 போட்டிகளிலும் விளையாடும்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ணத்துக்கான முக்கிய ஆயத்தமாக இந்த தொடர் இருக்கும்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பமாகும்.

இறுதியாக 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்தபோது அவர்கள் ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.

மேலும், ஒரே ஒரு டி20 போட்டியிலும் வெற்றி பெற்றனர்.

இரு அணிகளும் இறுதியாக ஒரு டி20 போட்டியில் மோதியது இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கிண்ணத்தை வென்றபோதுதான்.

அங்கு அவர்கள் தங்கள் குழு நிலை மோதலில் இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.

போட்டி விபரங்கள்:

முதலாவது ஒருநாள் – 2026 ஜனவரி 22

இரண்டாவது ஒருநாள் – 2026 ஜனவரி 24

மூன்றாவது ஒருநாள் – 2026 ஜனவரி 27

முதலாவது டி:20 – 2026 ஜனவரி 30

இரண்டாவது டி:20 – 2026 பெப்ரவரி 01

மூன்றாவது டி:20 – 2026 பெப்ரவரி 03

நன்றி

Leave a Reply