2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐ.எம்.எப். இன் விசேட குழு இலங்கை வருகை

தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து அரசாங்கத்துடன், கலந்துரையாடுவதற்கே இந்த விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்திருந்ததுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடந்த 15ஆம் திகதி கூடவிருந்தது.

எனினும், அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த கூட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஒத்திவைத்திருந்ததுடன், டித்வா சூறாவளியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீள 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் வழங்கிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply