2029 ஆம் நாமல்தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அநுர அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. அதனால் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் ராஜபக்சர்களை தொடர்புபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது. எமது அரசாங்கத்திற்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தார்கள். அவர்களுள் போதைப்பொருள் வர்த்தகர்கள், தவறான தொழில்களில் ஈடுபடுபவர்கள் என பலர் இருக்க முடியும். அவர்களுடைய செயற்பாடுகளுக்கும் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. போதைப்பொருள் வர்த்தகர்களோடு நாமல் ராஜபக்சவை தொடர்புபடுத்தி பிரதியமைச்சர் சுனில் வட்டகல கருத்து தெரிவிக்கின்றார். குறித்த நபர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது நாமல் ராஜபக்சவோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அவ்வளவே.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் Mp திஸ்ஸ குட்டியாராச்சி